Saturday, November 11, 2017

ஜனவரி 2-ந்தேதி வரை முதல்-அமைச்சரின் கணினி தமிழ் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் kaniniththamil award





ஜனவரி 2-ந்தேதி வரை முதல்-அமைச்சரின் கணினி தமிழ் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் | முதல்-அமைச்சரின் கணினி தமிழ் விருதுக்கு ஜனவரி 2-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- முதல்-அமைச்சராக இருந்த

ஜெயலலிதா தமிழ் வளர்ச்சியை கருத்திற்கொண்டு வளர்ந்துவரும் கணினி யுகத்திற்கேற்ப தமிழ்  மொழியை கணினியில் அனைத்து நிலைகளிலும் பயன்படுத்தும் வகையில் சிறந்த தமிழ் மென்பொருளை உருவாக்குபவர்களுக்கு முதல்-அமைச்சர் கணினித் தமிழ் விருது வழங்கப்படும் என்றும், விருது தொகையாக ரூபாய் ஒரு லட்சம், ஒரு பவுன் தங்கப்பதக்கம் மற்றும் தகுதியுரை வழங்கப்படும் என சட்டசபையில் அறிவித்தார். அவ்வறிவிப்பின்படி ஆண்டுதோறும் சிறந்த மென்பொருள் தெரிவு செய்யப்பட்டு

மென்பொருளை தயாரித்த தனிநபர் மற்றும் நிறுவனத்திற்கு விருது வழங்கப்பட்டு வருகிறது.


அவ்வகையில் 2017-ம் ஆண்டு முதல்-அமைச்சர் கணினி தமிழ் விருதுக்கு தனி நபர், நிறுவனத்திடமிருந்து தமிழ் மென்பொருள்கள் வரவேற்கப்படுகின்றன. போட்டிக்கு அனுப்பப்படவுள்ள மென்பொருள்கள் 2014, 2015, 2016-ம் ஆண்டுகளில் தயாரிக்கப்பட்டதாக இருத்தல் வேண்டும். இவ்விருதுக்குரிய விண்ணப்பம் மற்றும் விதிமுறைகளை தமிழ் வளர்ச்சித்துறையின் இணையதளத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விருதுக்கான விண்ணப்பம் தமிழ் வளர்ச்சி இயக்கத்திற்கு வந்துசேர வேண்டிய

கடைசி நாள் 2018-ம் ஆண்டு ஜனவரி 2-ந்தேதி.


விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி, தமிழ் வளர்ச்சி இயக்குனர், தமிழ் வளர்ச்சி வளாகம், தமிழ்ச் சாலை, எழும்பூர், சென்னை-8. தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்: 044- 28190412, 044- 28190413. மின்அஞ்சல்

tamilvalarchithurai.gmail.com,

இணையதள முகவரி

www.tamilvalarchithurai.org இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

8-ம் வகுப்பு தேர்வுக்கு தனித் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் VIII standard exams ...apply now

8-ம் வகுப்பு தேர்வுக்கு தனித் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் | ஜனவரி 2018-ம் ஆண்டு நடைபெறும் 8-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தனித்  தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம். 2018 ஜன.1-ம் தேதி பன்னிரெண்டரை வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். www.dge.tn.gov.in-ல் குறிப்பிடப்பட்டுள்ள சேவை மையங்களுக்குச் சென்று நவ.15 முதல் 25-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

தவறியவர்கள் சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் (தட்கல்) வரும் 27 முதல் 29-ம் தேதிக்குள் தேர்வு கட்டணத்துடன் கூடுதலாக ரூ.500 செலுத்த  வேண்டும். தேர்வுக் கட்டணம் ரூ.125, ஆன்லைன் பதிவுக் கட்டணம் ரூ.50 என ரூ.175 செலுத்த வேண்டும். முதன்முறை தேர்வெழுதுவோர் டி.சி., பதிவுத்தாள், பிறப்புச் சான்றிதழ் நகல்களில் ஏதேனும் ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும். ஏற்கெனவே தோல்வியடைந்த பாடத்தை எழுத, மதிப்பெண் சான்றிதழ் நகல்களை இணைக்க வேண்டும்.

TET - தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாத பட்டதாரி ஆசிரியர்களுக்கு சலுகை TET qualification rule relaxed



ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாததால், தகுதி காண் பருவம் முடிக்கப்படாமல் உள்ள ஆசிரியர்களுக்கு, புதிய சலுகை வழங்கப்பட்டுள்ளது.தமிழகத்தில், கட்டாய கல்வி சட்டம், 2010 அக்., 23ல் அமல்படுத்தப்பட்டது. இதில், ஆசிரியர் நியமனத்துக்கு, தகுதித் தேர்வு கட்டாயம் என வலியுறுத்தப்பட்டதால், 2011 நவ., 15ல், அதற்கான அரசாணை வெளியிடப்பட்டது.

அதே மாதம், பணி நியமனம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு, ஐந்தாண்டுகளுக்குள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என, நிபந்தனை விதிக்கப்பட்டது.
இதனால், அத்தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர் களுக்கு, பணி வரன்முறை ஆணை வழங்கப்பட்டிருப்பினும், தகுதி காண் பருவம் வழங்கப்படவில்லை.
ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தும் முன், பணி நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு, முழுமையாக தகுதித் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்தது.


இதனால், பணி நியமனம் பெற்றவர்களில், 2010 ஆக., 23க்கு முன், சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றோர், தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற தேவையில்லை என, அறிவிக்கப்பட்டது.
புதிய சலுகையாக, 'பணி நியமனம் பெற்றவர்களில், அதற்கான விளம்பரம், 2010 ஆக., 23க்கு முன் வெளியாகிஇருந்தால், அவர்களும், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற தேவையில்லை' என, அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்பிரிவில் வரும் ஆசிரியர்களின் தகுதிகாண் பருவத்தை முடித்து, ஆணை வழங்க, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், பெரும்பாலான பட்டதாரி ஆசிரியர்கள், பணி நிரந்தரம் செய்வதில் நிலவி வந்த சிக்கல் தீர்ந்துள்ளது.

Online counselling from next year Anna varsity given nod from the central அடுத்த கல்வி ஆண்டு முதல் ஆன்லைனில் என்ஜினீயரிங் கலந்தாய்வு அண்ணா பல்கலைக்கழகத்துக்கு அரசு அனுமதி அடுத்த கல்வி ஆண்டு முதல் ஆன்லைனில்


என்ஜினீயரிங் கலந்தாய்வு அண்ணா பல்கலைக்கழகத்துக்கு அரசு அனுமதி

அடுத்த கல்வி ஆண்டு (2018-2019) முதல் ஆன்லைனில் என்ஜினீயரிங் கலந்தாய்வை நடத்த அண்ணா பல்கலைக்கழகத்துக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழகம் முழுவதும் அண்ணாபல்கலைக்கழகம் அங்கீகாரம் பெற்றுள்ள என்ஜினீயரிங் கல்லூரிகள் 518 உள்ளன. இந்த கல்லூரிகளில் என்ஜினீயரிங் படிப்பில் மாணவ-மாணவிகளுக்கு சேருவதற்கான கலந்தாய்வை அண்ணாபல்கலைக்கழகம் நடத்தி வந்தது. இந்த கலந்தாய்வில் கலந்து கொள்ள நாகர்கோவில், திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை,

உள்ளிட்ட மாவட்டங்களில் வரும் மாணவ-மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். வெளியூர்களில் உள்ள மாணவ-மாணவிகள்

கலந்தாய்வுக்கு வருவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது என்றும் எனவே ஆன்லைனில் கலந்தாய்வை நடத்தவேண்டும் என்றும் அண்ணாபல்கலைக்கழக பதிவாளர் பேராசிரியர் எஸ்.கணேசன் உயர் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.அன்பழகனுக்கு கடிதம் எழுதி இருந்தார். அதன்படி அடுத்த கல்வி ஆண்டு (2018-2019) முதல் என்ஜினீயரிங் கலந்தாய்வை

ஆன்லைனில் நடத்த அண்ணா பல்கலைக்கழகத்துக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. இது குறித்து அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த கலந்தாய்வு 3 வருடங்களுக்கு பொருந்தும். அரசாணையின்படி அண்ணாபல்கலைக்கழக துணைவேந்தர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது, அண்ணாபல்கலைக்கழக பேராசிரியர் ரைமண்ட்

உத்தரியராஜ் புதிய உறுப்பினர் செயலாளராக சேர்க்கப்பட்டுள்ளார். ஏற்கனவே இந்த பொறுப்பில் பேராசிரியர் இந்துமதி இருந்தார். ஆன்லைனில் கலந்தாய்வை நடத்துவதற்கு வசதியாக புதிய மென்பொருளை வடிவமைக்கும் பொறுப்பு அண்ணாபல்கலைக்கழக பேராசிரியர் குழுவிடம் வழங்கப்பட்டுள்ளது.

Sunday, November 5, 2017

Heavy Rains Holiday announced in 9 Districs (6/11/2017)

Heavy Rains Holiday announced in 9 Districs (6/11/2017)

Arakkonam, Thiruvannamalai, Cuddlure, Karaikkaal, Viluppuram, Chennai and Thiruvallur Schools (only Schools) will be remain closed. The respective districts collectors had announced it earlier.

Tamil Nadu Weather Man has predicted that thorough out this month the weather will be harsh, and Chennai will have downpours very often until the end of this month.